பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


9-ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர் கிழார் அச்செய் யுட்கள் ஒன்றிலேனும் அவனைக் கடுங்கோ அல்லது இளங் கடுங்கோ என்று கூறவே இல்லை. இந்தச் சிறப்புப் பெயர் அவனுக்கு இருந்திருக்குமானால் இதனை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? இப்பெயர் இவனுக்கு இல்லாதபடியால் அவர் இப்பெயரைக் கூறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மேலும், சாசனங்கள் பெருங்கடுங்கோவின் மகன் இளங் கடுங்கோ என்று கூறுகின்றன. திரு. மகாதேவன், பெருங் கடுங்கோவைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறை என்றும், இளங்கடுங்கோவை அவன் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்றும் கூறுகிறார். இதிலும் இவர் தவறு படு கிறார். தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையின் மகன் இளஞ்சேர லிரும்பொறை என்று இவர் கூறுவது தவறு. பெருஞ்சேர லிரும்பொறையின் தம்பியாகிய குட்டுவன் இரும் பொறையின் மகன் இளஞ்சேர லிரும்பொறை என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன்

(7-ஆம் பத்து)


பெருஞ்சேரலிரும்பொறை 18-ஆம் பத்து)

குட்டுவன் இரும்பொறை இளஞ்சேரலிரும்பொறை (9-ஆம் பத்து.)

எனவே, கல்வெட்டுகளில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப் பத்து 7, 8, 9-ஆம் பத்து அரசர்களுடன் பொருத்து வது பொருத்தமாக இல்லை, தவறாகவே இருக்கிறது. (பாலை பாடிய) பெருங்கடுங்கோ , (மருதம் பாடிய) இளங்கடுங்கோ