பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


என்னும் இரண்டு சேர அரசர்களைச் சங்க இலக்கியங்கள் கூறுவதை திரு. மகாதேவன் அறியவில்லை. இவ்விரு பெயர் களும் சாசனப் பெயர்களுடன் பொருந்துவது வெளிப்படை. இப்பெயர்களைச் சாசனப் பெயர்களுடன் அவர் பொருத்திக் கூறாமல் அல்லது மறுத்துக் கூறாமல் விட்டது இந்தப் பெயர் களை அவர் அறியாததுதான் காரணம். சங்க காலத்துக் கல் வெட்டுகளை அறிவதற்குச் சங்க காலத்து இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன.

பாலை பாடிய பெருங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங்கோவும் இக்கல்வெட்டுகளில் கூறப்படுகிற பெருங் கடுங்கோவும் இளங்கடுங்கோவுமாக இருக்கக் கூடுமோ? கல்வெட்டுகளில் கூறப்படுகிற இவர்கள் தந்தையும், மகனும் என்று கூறப்படுகின்றனர். அன்றியும், 'பாலை பாடிய', "மருதம் பாடிய' என்னும் அடைமொழிகள் சாசனங்களில் கூறப்படவில்லை. சங்க இலக்கியங்கள் கூறுகிற இவர்கள் தந்தையும் மகனுமா என்று தெரியவில்லை. பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோ இருவரையும் சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோ இளங்கடுங்கோவுடன் பொருத்திக் கூறலாம் என்று தோன்றுகிறது. ஆனால் உறுதியாகத் துணிந்துக் கூற இயலவில்லை.

எனவே புகழூர் சாசனங்கள் குறிப்பிடுகிற கோ ஆதன் சேரலிரும்பொறை அவன் மகன் பெருங்கடுங்கோன் அவன் மகன் இளங்கடுங்கோன் ஆகிய மூவரையும் பதிற்றுப் பத்து 7,8,9-ஆம் பத்துகளின் அரசர்களாகிய செல்வக் கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ் சேரலிரும் பொறை என்பவர்களுடன் பொருத்துவதற்குப் போதிய சான்று இல்லை. அதுபோலவே, சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் இளங்கடுங்கோன் என்பவரைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோவுடன் பொருத்துவதற்கும் சான்று இல்லை. வேறு சான்றுகள் கிடைக்கிற வரையில், இவர்களைப் பிணைத்துப் பொருத்திச்