பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பெற்றிருந்தது. அந்நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டீரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவன் நள்ளி என்றும் பெயருடையவன். தோட்டி மலையையும் அதன் அரசனாகிய நள்ளியையும் வன்பரணர் கூறுகின்றார்.[1]

கண்டிர நாட்டின் சோலைகளிலே காந்தள் முதலிய மலர்கள் மலர்ந்தன என்று பரணரும் கபிலரும் கூறுகின்றனர்.[2] நள்ளியின் கண்டிரநாட்டுக் காடுகளில் இடையர் பசு மந்தைகளை வளர்த்தனர் என்றும், அவ்வூர் நெய்க்குப் பேர் போனது என்றும் காக்கை பாடினியார் கூறுகிறார்.[3] கண்டிரத்துக் காட்டில் யானைகளும் இருந்தன. கண்டிர நாட்டில் நள்ளியின் பெயரால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்ததைக் கொங்கு நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகின்றது.

கட்டி நாடு

கட்டி நாடு என்பது தமிழகத்தின் வடக்கேயிருந்தது. அது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. கட்டி நாட்டையாண்ட


  1. ‘இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர் தோட்டி. அம்மலே காக்கும் அணி நெடுங்குன்றில், பளிங்கு வகுத்தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி’ (புறம் : 150 : 25—28) (கோட்டி—யானைப்பாகர் யானைகளை அடக்கி நடத்துகிற ஓர் ஆயுதம். இது இரும்பினால் செய்யப்படுவது. அந்தப் பெயரையுடைய இந்த மலை ‘இரும்பு புனைந்து இயற்றா தோட்டி’ எனப்பட்டது.)
  2. (அகம் 152: 15-17, 288: 14-18)
  3. ‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த தெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி-கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் ஆயர், இடையர்)