பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

குதிரை மலையையும் அதனைச் சார்ந்த நாட்டையும் பிட்டங் கொற்றன் அரசாண்டான். இம்மலையில் வாழ்ந்த குறவர்கள் மலைச் சாரலில் தினையரிசியைப் பயிர் செய்து அந்த அரிசியைக் காட்டுப் பசுவின் பாலில் சமைத்து உண்டார்கள்.[1] குதிரை மலை, உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததென்று கருதுகின்றனர்.

நன்றமலை

இது கொங்கு நாட்டில் இருந்த மலை. இந்த மலையின் மேலிருந்து பார்ப்பவருக்கு இதைச் சூழ்ந்துள்ள ஊர்கள் தெரிந்தன். ஆகையால் இது ‘நாடுகாண் நெடுவரை’ என்று (பதிற்று, 9-ஆம் பத்து 5:7) கூறப்படுகின்றது. ‘நாடுகாண் நெடுவரை, யென்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய’ மலை என்று இதற்குப் பழைய உரையாசிரியர் விளக்கம் கூறுகின்றார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் 7ஆம்பத்துப் பாடியபோது அவருக்கு அவ்வரசன் இந்த மலை மேலிருந்து கண்ணிற் கண்ட நாடுகளைக் காட்டி அந்நாடுகளின் வருவாயை அவருக்குப் பரிசாக அளித்தான் என்று 7ஆம் பத்து அடிக்குறிப்பு கூறுகின்றது. “பாடிப்பெற்ற பரிசில், சிறுபுறமென நூறாயிரங் காணங்கொடுத்து நன்கு வென்னும் குன்னேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாங் காட்டி கொடுத்தான் அக்கோ,” என்று அடிக் குறிப்புக் கூறுகின்றது. கி. பி. 7 ஆம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர் காலத்தில் இவ்வூர் திருநணா என்று பெயர் வழங்கப்பட்டது.

விச்சிநாடு

சங்க காலத்துக் கொங்கு நாட்டிலே இருந்த ஊர்களில் விச்சி என்பதும் ஒன்று. பச்சைமலை என்று இப்போது பெயர்


  1. (புறம். 188: 1-14)