பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

 குறவர் ஏழனுருபுத் தொகை. குன்றம்-கொடுங் கோளூருக்கு அயலதாகிய செங்குன்றென்னு மலை. அது திருச்செங்கோடென்பவாலெனின், அவரறியார். என்னை? அத்திருச்செங் கோடு வஞ்சிநகர்க்கு (சேரநாட்டு வஞ்சி நகர்க்கு) வடகீழ்த்திசைக் கண்ணதாய் அறுபதின்காதவாறு உண்டாகலானும் அரசனும் (செங்குட்டுவன்) உரிமையும் மலைகாண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையினென்க."

பழைய அரும்பதவுரையாசிரியர் கூறுவதையும் அடியார்க்கு நல்லார் கூறுவதையும் ஆராய்வதற்கு இப்போது நாம் புகவில்லை. கொங்குநாட்டுத் திருச்செங்கோடு மலையில், கண்ணகியார் உயிர் நீத்தார் என்று பழைய செவிவழிச் செய்தி அரும்பதவுரையாசிரியர் காலத்தில் இருந்தது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. அரும்பதவுரையாசிரியர், திருச்செங்கோட்டில் கண்ணகியார் உயிர் நீத்தார் என்று கூறுவதற்குக் காரணம் இருக்க வேண்டும். இல்லாமல் அவர் கூறியிருக்க மாட்டார்.

நன்றா மலை

இந்த மலையின் உச்சியிலிருந்து பார்ப்பவருக்கு இதனைச் சுற்றிலுமுள்ள ஊர்கள் நன்றாகத் தெரிந்தன. ஆனது பற்றி இது 'நாடுகாண் நெடுவரை' என்று கூறப்பட்டது. “தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கில், கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை" (9ஆம் பத்து, 5:7) “நாடுகாண் நெடுவரை என்றது. தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய மலை என்றவாறு, இச்சிறப்பானே இதற்கு நாடுகண் நெடுவரை என்று பெயராயிற்று” என்று இதன் பழைய உரை கூறுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் 7ஆம் பத்தைப் பாடிய கபிலருக்கு அவ்வரசன் இந்த நன்றாமலை மேலிருந்து பரிசில் வழங்கினான் என்று ஏழாம்பத்துப் பதிகக் குறிப்புக்