பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

எதுகை நோக்கி இவ்வாறு சில பதிப்புகளில் மரந்தை என்று கூறப்பட்டது. சில பதிப்புகளில் இது ‘மாந்தை’ என்றே பதிப் பிக்கப்பட்டுள்ளது.

“குட்டுவன் ............ கடல்கெழு மாந்தை ”

(நற். 395: 4-9) என்றும், “குட்டுவன் மாந்தை ” (குறும். 34:6) என்றும்,‘துறைகெழு மாந்தை’ (நற். 35:7) என்றும் இது கூறப்படுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதன், மாந்தரன் என்று கூறப்படுகின்றான். "பலர்மேத் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரம், பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம்போல” (அகம். 142:3-6). அவனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறை "விரல்மாந்தரன் விறல் மருக” என்று (9-ஆம் பத்து 10:13) கூறப்படுகின்றான். இதனால், மாந்தைத் துறைமுகப்பட்டினம் செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திலிருந்து கொங்குநாட்டுத் துறைமுகமாக இருந்தது என்று தெரிகின்றது.

தொண்டி

சங்க காலத்தில் தமிழகத்தில் இரண்டு தொண்டித் துறைமுகப்பட்டினங்கள் இருந்தன. ஒன்று கிழக்குக் கடற் கரையில் பாண்டியருக்கு உரியதாக இருந்தது. மற்றொன்று மேற்குக் கடற்கரையில் பூழிநாட்டில் சேரருக்கும் பொறையருக்கும் உரியதாக இருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களுக்குத் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், அவர்கள் தொண்டியைத் தங்களுடைய துறைமுகப் பட்டினமாகக் கொண்டிருந்தார்கள், சங்கச் செய்யுள்கள் தொண்டிப் பட்டினத்தைக் கூறுகின்றன. வெண் கோட்டியானை விறல்போர்க் குட்டுவன், தெண் திரைப் பரப்பில் தொண்டி முன்துறை” (அகம், 290; 12-18) என்றும், “திண்தேர்ப் பொறையன் தொண்டி முன் துறை” என்றும் (குறும். 128-2), “வளை கடல் முழவின்