பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

தொண்டியோர் பொருந” என்றும் (9-ஆம் பத்து 4-21), “திண்தேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (அகம்.60-7), “கல்லென் புள்ளியன் கானலந் தொண்டி” என்றும் (நற். 195-5), “அகல்வயல், அரிநர் அரிந்தும் தருவநர் பெற்றும், தண்சேறு தாய் மதனுடைய நோன்றாள், கண் போல் நெய்தல் போர்விற்னாக்கும், திண்டோப் பொறையன் தொண்டி” என்றும் (நற். 8:5-9) இந்தப் பட்டினம் கூறப்படுகிறது.

தொண்டிப் பட்டினத்தைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. கோட்டை வாயிலின் கதவில் மூவன் என்பவனுடைய பல்லைப்பிடுங்கிப் பதித்திருந்தது என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. “மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்தியகதவில், கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்.” (நற். 18:2-5). யவனர்கள் தொண்டியைத் ‘திண்டிஸ்’ (Tindis) என்று கூறினார்கள்.