பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இளவெளிமானிடஞ் சென்று பரிசு கேட்டபோது அவன் சிறிது கொடுக்கக் கொள்ளாமல் பெருஞ்சித்திரனார் குமணனிடம் வந்து யானையைப் பரிசில் கேட்டார்.[1] அவன் யானைக் கொடுக்க அதைக் கொண்டுபோய் வெளிமானூர்க் காவல் மரத்தில் கட்டி ஒரு செய்யுள் பாடினார்.[2]

குமணனுடைய தம்பி இளங்குமணன் என்பவன் தமையனாகிய குமணனைக் காட்டுக்கு ஓட்டி நாட்டைக் கைப்பற்றி யரசாண்டான். குமணன் காட்டில் தங்கியிருந்தான். அப்போது பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் கண்டு ஒரு செய்யுள் பாடினார். [3]அச்செய்யுளில் அட்புலவருடைய வறுமை நெஞ்சையுருக்கும் தன்மையதாக இருந்தது. அச்செய்யுளைக் கேட்ட குமணன், தன்னுடைய துன்பத்தைவிடப் புலவரின் துன்பம் கொடியது என்று உணர்ந்து, தன் கையில் பொருள் இல்லாதபடியால், தன்னுடைய வாளைப் புலவரிடம் கொடுத்து, தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தன் தம்பியிடங் கொடுத்தால் அவன் பரிசாக பொருள் கொடுப்பான் என்று கூறினான். வாளைக் கையில் வாங்கிக் கொண்டு புலவர் இலங்குமணனிடம் வந்து குமணன் வாள் கொடுத்த செய்தியைக் கூறினார். பிறகு என்ன நடந்தது என்று தெரிய வில்லை. குமணனைப் பற்றி இவ்வளவுதான் தெரிகின்றது. குமணனுடைய முதிரம் என்னும் ஊர் கொங்கு நாட்டில் எவ்விடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. இளங் குமணனைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை.

விச்சியரசர்

விச்சிமலையையும் அதனைச்சார்ந்த நாட்டையும் அரசாண்டவர் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தனர். விச்சியூரில் விச்சிமலை இருந்தது. பச்சைமலை என்று


  1. (புறம். 180, 161, 162, 183 )
  2. (புறம் 161, 162.)
  3. 164,