பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உம்பற்காடு என்னும் நாட்டை அடக்கி அதனைத் தன்னுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது இவனுடைய முக்கிய செயலாகும். இவனுடைய தமயனான நெடுஞ்சேர லாதன், தன்னைப் பாடிய (இரண்டாம்பத்து) குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐஞ்ஞூறூர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான்.[1]

இதனால் உம்பற்காடு அக் காலத்தில் சேர அரசர்களுக்கு உரியதாயிற்று என்பது தெரிகின்றது.


  1. பதிற்று 2ஆம் பத்துப் பதிக்கக் குறிப்பு