பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்துவஞ்சேரல் இரும்பொறை
4

உதியஞ் சேரலுடைய தம்பி, அந்துவஞ் சேரல் இரும்பொறை என்பவன். அந்துவஞ் சேரல் இரும்பொறை உதியஞ் சேரலுடைய தாயாதித்தம்பி. இவன் தளராத ஊக்கத்தோடு போர் செய்து தென்கொங்கு நாட்டில் சில நாடுகளைக் கைப்பற்றினான். இதனால், ““மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று கூறப்பட்டான்.[1]

இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றின போது இவனுக்கு உதவியாக இருந்தவன் இவனுடைய தமயன் மகனான பல் யானைச் செல்கெழு குட்டுவன். இதனை,

“மாகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்.”

என்பதனால்[2] அறிகிறோம். இவன் காலத்தில் கொங்கு நாட்டில் சேர இராச்சியத்தை அமைப்பதற்குக் கால்


  1. 7ஆம் பத்துப் பதிகம்
  2. 3ஆம் பத்து. 2: 15-18