பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இடப்பட்டது என்று கருதலாம். கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர் அரசர்களில் இவனே முதலாவன் என்று தோன்றுகிறான்.

அந்துவஞ் சேரல் இரும்பொறை கொங்கு நாட்டுக் கருவூரைவென்று அதைத் தன்னுடைய தலைநகரமாக்கிக் கொண்டான். அங்கு வேண்மாடம் என்னும் அரண்மனையை அமைத்துக் கொண்டு அங்கிருந்து அரசாண்டான். அப்போது அவன் ‘சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். நரி வெரூஉத் தலையார் அவனை நேரில் கண்டு பாடினார். [1]அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் கருவூரேறிய ஒள் வாட்ட கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று நின் உடம்பு பெறுவாயாகென, அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்ற நரிவெரூஉத் தலையார் பாடியது” என்று கூறுகிறது.

இந்தக் கொங்கு நாட்டுக் கருவூர் வேறு, சேர நாட்டுக் கடற்கரையிலிருந்த கருவூர் வேறு. அந்துவன் சேரல் இரும் பொறை இந்த ஊரை வென்றபோது இதற்குச் சேர நாட்டுத் தலை நகரமாகிய கருவூரின் பெயரையே சூட்டினான். சேர நாட்டுக் கருவூருக்கு வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது போலவே இந்தக் கொங்கு நாட்டுக் கருவூருக்கும் வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது. [2]

கோப்பெருஞ் சேரல் இரும்பொறை கருவூர் வேண்மாடத்தில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும்


  1. புறம் 5
  2. சங்க காலத்தில் இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், சென்ற தலைமுறையில் சில ஆராய்ச்சிக்காரர்கள் கருவூர் சேர நாட்டிலிருந் ததா கொங்கு நாட்டிலிருந்ததா' என்பது பற்றி வாதங்கள் நிகழ்த்திக் கட்டுரைகள் எழுதினார்கள். சங்ககாலத்தில் சேர நாட்டிலும் கொங்கு நாட் டிலும் வெவ்வேறு கருவூர்கள் இருந்ததை அவர்கள் அறியவில்லை.