பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அறநெறியறிந்தவனாக இருந்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத் தினால் அறிகிறோம்.[1]

செ.க.வா. ஆதன் சில யாகங்களை (வேள்விகளைச்) செய்து பிராமணருக்குத் தானங் கொடுத்தான். இவன், வேள்வியில் பிராமணருக்குப் பொன்னை நீர்வார்த்துக் கொடுத்தபோது அந்நீர் பாய்ந்து தரையைச் சேறாக்கியது என்று கூறப்படுகிறது. இதனால் இவனுடைய தானம் மிகப் பெரிதாக இருந்தது என்பது தெரிகின்றது.[2]

புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து இவ்வரசன் போற்றினான். இசைவாணர்களையும் இவன் ஆதரித்தான். ‘பாணர்புரவல, பரிசிலர் வெருக்கை’ என்று இவன் புகழப்படுகிறான்.[3]

இவ்வரசனிடம் பரிசில் பெறச்சென்ற குண்டுகண் பாலியாதனார் என்னும் புலவருக்கு இவன் பெருஞ்செல்வம் வழங்கினான். யானை, குதிரை, ஆட்டுமந்தை, மாட்டு மந்தைகள், மனை, மனையைச் சார்ந்து வயல்கள், வயல்களில் வேலை செய்யக் களமர் (உழவர்) இவைகளை யெல்லாம் இவ்வரசன் இப்புலவருக்கு வழங்கினான், இவைகளை யெல்லாங் கண்ட இந்தப் புலவர் இது கனவா நனவா


  1. இவன் ‘புரோசு மயக்கினான்’ (7 ஆம் பத்து பதிகம்) ‘புரோச மயக்கி’ என்றது ‘தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்த தென்றவாறு’ என்று பழைய உரை கூறுகிறது.
  2. (‘அறங் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய, உரைசால் வேள்வி முடித்த !கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு, இருஞ்சேறாடிய மணல் மலி முற்றம்’ (7ஆம் பத்து 4:3-6).
  3. (7 ஆம் பத்து 5:11)