பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

இ.வ. நெ. சேரலாதன் 58 யாண்டு அரசாண்டான். இவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 யாண்டு அரசாண்டான். மாந்தரன் கடுங்கோவாகிய செ. க. வா. ஆதன் 25 யாண்டு அரசாண்டான். ஆகையால் இவன், இ. வ. நெ. சேரலாதன் காலத்திலேயே இறந்து போனான் என்பதும், இவனுக்குப் பிறகு இவன் மகனான பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான் என்பதும் தெரிகின்றன. அதாவது இ.வ.நெ. சேரலாதன் சேர நாட்டை ஆட்சிச் செய்த காலத்திலேயே கொங்கு நாட்டைச் செல்வக் கடுங்கோ வாழியாதனும் அவன் மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறையும் (தகடூரை எறித்தவன்) அரசாண்டார்கள்.

இவர்கள் மூவரும் (இ. வ. நெ. சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், செ. க. வா. ஆதன்) சமகாலத்தில் இருந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்திலிருந்தும் அறிகிறோம். சோழ நாட்டிலிருந்த பராதரன் என்னும் பிராமணன் வேதம் ஓதுவதில் வல்லவனாக இருந்தான். அவன், சமகாலத்தில் சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் அரசாண்ட இந்த மூன்று அரசர்களிடத்தில் போய் வேதம் ஓதிப் பரிசு பெற்றான். பராசரன் முதலில், ‘வண் தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த, திண்திறல் நெடுவேல் சேரலனை’ (பல் யானைச் செல்கெழுகுட்டுவனைக்) காணச் சேர நாட்டுக்குச் சென்று அவனுடைய அவையில் பார்ப்பனருடன் வேதம் ஓதி அவர்களை வென்று ‘பார்ப்பனவாகை’ சூடினான். அப்போது அவ்வரசன் இவனுக்குப் பல பரிசுகளை வழங்கினான். பரிசுகளைப் பெற்ற பராசரன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனிடத்திலும் சென்று பரிசுகளைப் பெற்றான். பிறகு கொங்கு நாட்டுக்கு வந்து மாந்தரஞ் சேரலாகிய செ. க. வா. ஆதனிடத்திலும் பரிசு பெற்றான். இவன் பெற்ற பரிசுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு தன்னுடைய ஊருக்குத் திரும்பி வருகிற வழியில் பாண்டி நாட்டுத் தண் கால் என்னும் ஊரில் அரசமர மன்றத்தில் தங்கி இளைப் இளைப்