பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

ஓரியைப் போரில் கொன்று கொல்லி நாட்டை வென்று அதைச் சேரலனுக்குக் கொடுத்தான் என்று கூறுகிறார்.*[1] இங்குச் சேரலன் என்பவன் பெருஞ்சேரல் இரும்பொறை யாவரன்.

இப்போர் பரணரின் காலத்தில் நடந்தது. சேரன் செங்குட்டுவனை 5-ஆம் பத்தில் பாடிய பரணர் இப்போர் நடந்த காலத்தில் இருந்தவர். அவர் ஓரியின் கொல்லியைப் பாடினார்.[2] அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும் பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால் பரணர் காலத்திலேயே ஓரிக்குரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.

8-ஆம் பத்துப் பதிகம், பெருஞ்சேரலிரும் பொறை ‘கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை’ போர் வென்றான் என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரை இவ்வாறு விளக்கங் கூறுகிறது. இதன் பதிகத்துக் கொல்லிக்

கொ-6


  1. “முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்லில், ஓரிக்கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” (அகம். 209:12-15)
  2. ‘ஓரி, பல்பழம் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகம்.208:21-22) என்றும், ‘கைவண் ஓரிகானம்’ (புறம். 199:3) என்றும், ‘வல்வில் ஓரி கானம்’(நற். 6:9) என்றும், ‘மாரி வண்மகிழ் ஓரி கொல்லி’ (நற். 265:7) என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஓரியின் கொல்லியைக் கூறின பரணர் இன்னொரு செய்யுளில் வெள்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி' (அகம். 62:12-13) என்று கூறுகிறார். அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால் பரணர் காலத்திலே ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும் பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.