பக்கம்:கொடு கல்தா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 மனித சமுதாயம் அமைதியுடன் வாழ்வதற்கு முத லில் 'யுத்தம்' தொலையவேண்டும்.

யுத்தங்கள் தொலையுமா ?

மனித வர்க்கம் இருக்கிறவரை யுத்தமும் இருந்தே தீரும்!சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் பிறந்தது சமர். மனித நாகரிக வளர்ச்சியுடன் வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது யுத்தமும் சரித்திரமுமே இதற்குச் சான்று. பலவித நாகரீகக் கலாச்சாரங்களும், பல்வேறு சாம் ராஜ்யங்களும் யுத்தத்தினால் வளர்ந்து, யுத்தத்திலேயே வாழ்ந்து, யுத்தத்தினாலே மடிந் துள்ளன. இன்றைய வல் அரசுகளும் யுத்தங்களிடையே வாழ்கின்றன. பேரரசுகள் சிற்றரசுகளை ஐக்கியப் படுத்திக்கொள்வ தும், இவற்றுக்காக அப்பாவி ம னி த ர் க ள் உயிரைக் கொடுப்பதும்...சிலரது அதிகார வெறிக்காக உலகெங்கும் உள்ள மக்கள் அவதியுறுவதும்.புதிய விஷயங்கள் அல்ல. உழையாமலே மேனிலை உற்று வாழ விரும்புகிறவர் கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று கொண் டிருப்பதனால், அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்படும் போது, சாதாரண வாழ்விலும் உழைத்துச் சாகிறவர்கள் யுத்தகாலத்தில் அதிகம் உழைக்கவும் உயிரைக் கொடுக்க இதே ரீதியில் போகுமானால், உலகில் உழையாமலே ஆதிக்கம் செலுத்துவோருக்கும் உழைத்தும் வாழ்க்கை வசதிகளைப் பெற முடியாமல் உழல்கிற இனத்துக்கும் இறுதிப்போர் வரத்தான் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/12&oldid=1395477" இலிருந்து மீள்விக்கப்பட்டது