பக்கம்:கொடு கல்தா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 14 –- எதிர்க்கவும் இப்படிப் பல காரணங்களுக்கும் பயன் படுத் தப் படுகின்றன. ஆகவே, யுத்தம் முதலாளி வர்க்கத்தின் பாதுகாப்பு; எதேச்சாதிகாரிகளின் பலப் பரிசோதனை, மண்வெறி பிடித்த மமதையாளர்களின் சிருஷ்டி என்பது தெளிவாகும். ஒரு யுத்தம் முடிந்து பொருளாதார நிலை பாதகமடை கிறபோது, மீண்டும் பொருளாதார தகிடுதத்தங்கள் செய் வதற்காக பணமூட்டைகள் மறுபடியும் யுத்தம் உண்டாக கண்ணாகயிருப்பது வியப்பல்ல. இதனால் யுத்தபீதி தொலைய உலக மக்கள் அனைவரும் பொருளாதார சமத்துவம் பெறவேண்டும் என்கிற சிந்தனையாளர் களின் தீர்ப்பு ஒரு வகையில் சரியானது தான் என்பது யோசிப்பவர்களுக்குப் புரியும். யுத்தத்திற்கு சமுதாயத்திலே நிலவுகிற பொருளாதார பேதம் முக்கிய காரணங்களில் ஒன்றே தவிர, அதுவே முழுக்காரணமாகி விடாது. மக்களின் மனப்பண்பும், வாழ்க்கை முறையும், கலைத்திறன்களும் மாற்றி யமைக்கப் படவேண்டும். மனித வாழ்விலே புதுமலர்ச்சி தேவை. - மனிதர்கள் தங்கள் வாழ்வில், தங்கள் சூழ்நிலையில் நிலவுகிற தன்மைகளையும் தவறுகளையும் உணர்ந்து, குணங் களைப்போற்றி குறைகளை அறுக்கும் சக்தி பெறுவதற்கு ஏற்ற வகையில் அறிவு வளர்ச்சி பெறவேண்டும். அதற்கு வகை செய்வதுதான் தலைவர்களின், அரசியல் கட்சிகளின், சமூக சீர்திருத்த வாதிகளின், இலக்கியக்காரர்களின், கலை ஞர்களின் கடமையாகும். இன்றைய நிலை என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/14&oldid=1395433" இலிருந்து மீள்விக்கப்பட்டது