பக்கம்:கொடு கல்தா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 16 —

யான வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் இவர்கள் ஒரு சிலரது நன்மைக்காக உழைக்கிற பண்பை விட்டிருக்க வேண்டும்.அடிமைப் புத்திக்கு கல்தா கொடுத்தாக வேண்டும்.

துறைதோறும் வேரூன்றி, அந் த த் துறைகளையும், அவற்றின் மூலம் மக்களின் மனோபாவத்தையும், அதனால் மனித குல வளர்ச்சியையும் கெடுக்கிற காளான்களுக்கும் புல்லுருவிகளுக்கும் கல்தா கொடுத்தாக வேண்டும்-மனித சமுதாயம் மேனிலை அடையவேண்டுமானால்.

‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்’ என்று சொல்லிச் சொல்லி காலம் போக்குவதால் பயனில்லை. வாழ்விலே புதுமை காண, பழமைக்கும் பழமை விரும்பிகளுக்கும்,

கிழடு தட்டியவர்களுக்கும் சீட்டுக்கொடுத்தாகவேண்டும். அதற்கு இன்னும் காலம் வரவில்லை என்று காத்திருந் தால், காலம் சுவடு விழுந்த பாதையில் மந்த கதியிலே உருண்டு கொணடிருக்கும்.

“ஆர்த்திடு முரசு ஊதுக சங்கு!
சாளரத்தூடே, கதவுகளிடையே
வெள்ளம் போல் பாய்க ஒலியே!
புனித ஆலயம் புகுந்து கும்பலைக் கலைக்க.
மாணவர் கற்றிடும் பள்ளிகளிடையே ஆர்த்திடு!
         ஊதி முழக்கிடு !
மணமகன் எனினும் விட்டிட வேண்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/16&oldid=1395463" இலிருந்து மீள்விக்கப்பட்டது