பக்கம்:கொடு கல்தா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48-

பேசிப் பேசி பொழுதோட்டுவதால் எ ன் ன ப யன்? இன்றைய நிலை என்ன ? தற்கால நிலை தமிழருக்குப் பெருமை தருவதாயில்லை. தமிழரின் வாழ்க்கைத் தரமும், தமிழரின் பண்பாடும் மிக வும் தாழ்ந்து கிடக்கின்றன. நாட்டிலே செழிப்பில்லை. மக்கள் முகத்திலே மகிழ்ச்சி இல்லை. அவர்கள் உள்ளத் தில் நம்பிக்கை இல்லை. உடலிலே தெம்பு இல்லை. ஆனால், மக்கள் மனதில் அறியாமை மண்டிக்கிடக் கிறது. சமுதாயத்திலே ம டத் த னங்கள் வேரூன்றிக் காடாக வளர்ந்து கிடக்கின்றன. நாட்டில், சகல துறை களிலும், ஒளியில்லை ! ஏன் ? முக்கிய காரணம் அறியாமைதான். நாட்டினரில் எண்ணற்றோர் கல்வியறிவு இல்லாதவர் கள். கல்வி கற்கும் ஆசை இருக்கிற சிலருக்கு வசதி கிடையாது. கல்வி க ற் ற வர் களி ல் பெரும்பாலர் கூட, படித்தும் பயனற்ற தன்மை உடையவர்களாகத் தான் உள்ளனர். காரணம், கற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறையில் உள்ள கோளாறுதான். கல்வித் திட்டம் காலத்துக்கும், வளர்ந்துவரும் அறிவு ஆராய்ச்சிகளுக்கும் ஏற்ப அமையவில்லை. விஞ்ஞானத்தையும், பூ கோள சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்க முயல்கிறபோதே முட்டாள் தனத்தை யும் குருட்டுத் தனமான நம்பிக்கைகளையும் வளர்க்க உதவும் பாடங்களும் வலுக்கட்டாயமாக போதிக்கப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/19&oldid=1395485" இலிருந்து மீள்விக்கப்பட்டது