பக்கம்:கொடு கல்தா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-20- சூரியன்,சந்திரன், கோளங்கள், வான மண்டல ஆராய்ச்சிகள் பற்றிப் படிக்கிற பையன்கள், சூரிய பக வான், அவன் மனைவி சாயாதேவி ,சந்திரன் வளர்வதும் தேய்வதும் பெண்ணால் விளைந்த சாபத்தினாலே....வானத்தில் கடவுள் இருக்கிறார் தேவர்கள் இருக்கிறார்கள்; தேவிகள் அரம்பை ஊர்வசிகள் நடனமாடிக் களிப்பூட்டும் ராஜதர்பார்களும், குறையா இன்பம் உடைய சொர்க்கங்களும் சூரியன், சக்தி,

உள்ளன என்றெல்லாம் நம்பவேண்டியதாகிறது!

பையன்களைச் சொல்லுவானேன்! சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எவ்வாறு- ஏற்படுகிறது என்று விளக்கிச் சொல்லி, படம் போட்டுக் காட்டுகிற வாத்தியாரய்யாக் கள்கூட, கிரகண தினத்தன்று ராகு, கேது என்கிற பாம்பு சூரியனை (அல்லது சந்திரனை) விழுங்குவதால் கிரணம் விளைகிறது என்று நம்பி கடற்கரையிலோ, நதி யோரத்திலோ, எங்கோ தர்ப்பணம்' பண்ணக்காத்திருக் கிறார்களே. அறிஞர்கள், பட்டம் பெற்றவர்கள், பத்திரி காசிரியர்கள், ஆளவந்தார்கள் கூட இத்தகைய முட்டாள் தன எண்ணங்களில் நம்பிக்கைகொண்டு, பட்டினி கிடந்து,கிரகணம் விட்டதும் என்ன எழவுகளெல்லாமோ செய்து தீர்ப்பதில் முனைகிறார்களே - அதை என்ன சொல்ல! * மந்திரிகள் நாடாள வந்த பிறகு கிரகணங்கள் அதிக முக்கியத்துவமும் புனிதமும் பெற்று, பொது விடு முறை நாட்களாக சர்க்கார் பட்டியலில் பதிவும் பெற்றுவிடுகின்றன. நாட்டிலே-படித்தவர் படியாதவர் என்கிற பேதா பேதமற்று-திகழ்கிற முட்டாள் தனங்கள் எவ்வளவோ. அவற்றில் இது ஒரு சிறு உதாரணம். இத்தகைய அறியா மைக்கு கல்தா கொடுக்கப்பட வேண்டும்-மக்களின் நிலை உயரவேண்டுமானால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/20&oldid=1395583" இலிருந்து மீள்விக்கப்பட்டது