பக்கம்:கொடு கல்தா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-22-

நாடாள வருவோரும் நாட்டுக்கு வழிகாட்ட விரும்புகிறவர்களும் மக்களின் நலத்தையே முக்கியமாகக் கருதிக் காரியங்கள் புரிய வேண்டும். ஆனால், இன்றோ சந்தர்ப்ப வசத்தினால் பணக்காரர்களாகவும், பெரிய மனிதர்களாகவும் வாழ வசதி பெற்று விட்டவர்களுக்குத் துணைபுரியவே இவர்களது செயல்கள் பயன்படுகின்றன. இவர்களது நன்மையை உணர்ந்து கொண்டு மற்.றவர்கள் நாட்டு நலம் கெடுக்கும் சச்சரவுகளாக வாழும் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. கறுப்பு மார்க்கெட் கயவர்களை கழுவில் ஏற்றுவோம்,பதவிக்கு வந்ததும் என்று கர்ஜித்த தலைவர்கள் கறுப்புச் சந்தைக் கழுகுகளை விசாரணைக்குக் கூட கொண்டுவர வில்லை; அக்கயவர்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளுக்கு அடிகோலியதாகக் கூடத் தெரியவில்லை. சுயநல வெறிபிடித்த கயவர்களின் லீலைகளால், நாட்டிலே பஞ்சமும் பசியும் பயமுறுத்திக் கொண்டே வாழ் கின்றன. பஞ்சமும் பசியும் வியாதிகளும் மலிந்திருப்பதற்கு வேறு முக்கிய காரணங்களும் உண்டு. மக்களின் அறியாமையும், சரியாக வாழ வசதியின்மையும் போக, மக்களின் சோம்பேறித்தனமும் முதன்மையானது இதற்கு நம்நாடு விவசாயத்தை நம்பியிருப்பது விவசாயம் என்பது சோம்பல் பிழைப்பு: அதிலும், பருவகாலங்கள் பொய்த்துப் போகின்றன. பல வருஷங்களாக மண் வளம் குன்றிவிட்டது. இவற்றால் பூமியிலே நல்ல விளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/22&oldid=1395585" இலிருந்து மீள்விக்கப்பட்டது