பக்கம்:கொடு கல்தா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றை வளர்ப்பவர்கள் சொல்லிலும் செயலிலும் மாற்றம் அடைதல் நன்று. மாற விரும்பவில்லையெனில், கால மும், புதுயுக இளைஞர்களும் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கத் தவறார்கள்.

இளைஞர்காள்!

துடிப்பும், செயல் திறமும், மனித மாண்பும், நட்பும் கிறைந்து முன்னேறும் உங்களை நான் காண்கிறேன். முதியோர் தேங்கி நின்றனரோ ! வாடித் தளர்ந்து தயங்கினரோ? காலக் கடலின் கரையோரம் கனத்துக் கால் கடுத்து நின்றாரோ! அழியாப் பணியை நாம் ஏற்போம். பொறுப்பை, அறிவை நாம் ஏற்போம். சென்றது, பின் நிறுத்திடுவோம். புதிய,வலிய,தனியுலகம் அமைத்திடுவோம். புத்துணர்வோடு, புது வலிவோடு உலகை-தொழில் உலகை - நாம் பற்றிடுவோம். முன்னேறுவோம். பின் வந்துமொய்த்திடும் கும்பலாலே நாம் சிறிதும் தளரவோ தாழ்ந்திடவோவேண்டாம். முன்னேறுக! சமரிடை, தோல்வி நடுவிலே, நில்லாது முன் செல்க ! சாவு வந்து எதிர்ப்படினும் நின்றிடாமல் முன்னேறுகவே!" -விட்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/26&oldid=1396056" இலிருந்து மீள்விக்கப்பட்டது