பக்கம்:கொடு கல்தா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் அறிவற்றவர்களாகவே வாழவேண்டும் விரும்புகிற வீணர்களுக்குச் சரியான பாடம் கற்பியுங்கள்: எங்கும் அறிவொளி பரப்ப முயற்சி செய்யுங்கள்! ம னி த ைர மடையர்களாக்கும் மதக்கட்டுப்பாடு களுக்கு, வெறியர்களாக்கும் விழா, பூஜை முதலியவை களுக்கு, அறிவற்றவர்களாக்கும் அர்த்தமற்ற சம்பிரதாயச் சடங்குகளுக்கு சாவுமணி அடியுங்கள் :

சோம்பலுக்கு கல்தா கொடுங்கள்! சோம்பலை கெளரவிக்கும் பொய் பகட்டுகளை விரட்டி அடியுங்கள்! பொய்மையை, போலித்தனத்தை, வ ஞ் ச க த் ைத, சூழ்ச்சியை, சிறுமைகளைக் குழிதோண்டிப் புதையுங்கள் ! அன்பை, ஆர்வத்தை, உழைப்பை, உற்சாகத்தைப் போற்றி வளருங்கள். வளர்க்க உதவுங்கள். ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். த ன து தேவைகளை கூடிய வரையில் தானே பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். தனது தேவைகளுக்காக, தானே உழைப்பது கேவலம் என்று சொல்கிறவர்களின் மண்டை யில் அடித்து உண்மையை உணரச்செய்க! உழையாமலே வாழ்வதற்கு சகாயம் புரிய சுலபமான வழிகள் - எத்து வியாபாரம் - கண்டு பிடிப்போரைத் திருத்தியாக வண்டும். சிறுவர் சிறுமிகளை ஆரம்பத்திலிருந்தே நல்ல முறை யில் வளர்க்க வசதிகள் செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/29&oldid=1396060" இலிருந்து மீள்விக்கப்பட்டது