பக்கம்:கொடு கல்தா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகல கோணங்களிலும், நாடு நெருக்கடியான கட்டத்தை அடைத்திருக்கிறது. நாட்டு நெருக்கடியை நீக்கி மக்களுக்கு நன்மைகள் புரியக்கூடிய திட்டங்களை ஆளவந் தார்கள் செய்ய வேண்டும். நேர காலங்கள் பயக்கும் பொதுவாக, நாட்டுக்கு நிரந்தர உயரிய திட்டங்களை தமது நாட்டுக்கு வழிகாட்டத் தக்க தலைவர்கள் இதுவரை வகுக்கவில்லை, இன்று நாட்டிலுள்ள எந்தக் கட்சிகளிடத்தும் உயரிய திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சும்மா உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தி யைப் பெருக்குங்கள்! என்று முழங்கி வருவதால் பய னில்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்த நம் நாடு இனியும் விவசாயமே தனிப் பெரும் கதி என்று நம்பிக்கிடப்பது நல்ல தல்ல என்பதைக் காலம் நிரூபித்து வருகிறது. விவ சாயத்தோடு பல தொழில் வளர்ச்சிக்கு ஆவன பலவும் செய்ய வேண்டும் சர்க்கார். மழை சரியானபடி பெய்யாததாலும், நீர்ப்பாசனங் கள் வளமுற்று வேலைசெய்ய முடியாததாலும், நல்ல விளைச்சல் கொடுக்கவேண்டிய ஜில்லாக்களில் தொடர்ச்சி யாக பஞ்சம் வந்துகொண்டே யிருக்கிறது. நெல் பெரு வாரியாக உற்பத்தியாகக் கூடிய தமிழகம் சோற்றுக்கு பிறநாட்டின் தயவை எதிர்பார்த்து நிற்கிறது. நகரங்களில் ஆளுக்கு இவ்வளவுதான் சோறு என்கிற அளவு கூட ஒரே நிலையில் நிற்க முடியவில்லை. கூடலாம் குறையலாம் என்று உணவு மந்திரி அடிக்கடி சொல் லி எச்சரிக்க வேண்டிய நிலைமை தான் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/33&oldid=1396064" இலிருந்து மீள்விக்கப்பட்டது