பக்கம்:கொடு கல்தா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー35 -

ஒளி புகட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் அறிவுச் சக்தி நாட்டிலே அதிகமுண்டு; திறமையும் மேதை மெரு கும் சேர்ப்பதற்கு அருகதையுள்ள உழைப்புச்சக்தியும்

அதிகமிருக்கிறது. திட்டம், கொள்கை, உறுதி யின்மை யால் பயனுள்ள செயல்முறைகளும், எண்ணங்களும் கையாளப்பெறாமலே வீணாகின்றன. ஜனத்தொகையில் பெருவாரியானவர்கள் வாழையடி வாழையாக வ ந் த பத்தாம்பசலி முறைகள், பிற்போக்குத்தனமான பண்பு களிலுமே இன்னும் ஒட்டிக்கொண்டு சிரமப்படுகிறார்கள். இன்றைய நாட்டு நிலை சீருற, சிறந்த பயனுள்ள தொழில் திட்டங்களுக்குத் தேவையான செயல் முறைகளுக்கு அடி கோலாவிடில், மிகுந்த பயங்கரமான ஆபத்துகளே நாமே வலிய வரவேற்பதாகும். திறமையுள்ள இ ளை ஞ ர் க ள் பயனுள்ள தொழிலில் ஈடுபட்டு, தொழில் வளர்ச்சியை தங்கள் லட்சியமாகக் கருதி உழைக்க வேண்டும். சோம் பேறித்தனத்தை பெரிய குற்றமாக பாவிக்க வேண்டும் நாட்டின் பொருளாதார நிலையை பலத்த அஸ்திவாரத்தின் மீது உறுதிப்படுத்துவதற்கு, மக்களின் ஓயாத உழைப் பைத் தவிர வேறு மாற்று எதுவுமில்லை வளம் மிகுந்த வாழ்க்கையை ஸ்தாபித்துள்ளது அமெரிக்கா. அதற்குக் காரணம் என்ன?நா ட் டி ன் கல்வி முறை, சமுதாய அமைப்பு முறைகளில் அமெரிக்கா போற்றற்குரிய சில பண்புகளைப் பாதுகாத்து வளர்க்கிறது. அவையாவன - திறமை, தொழிலாக்கம், சந்தர்ப்ப சமத் துவம், உழைப்பு ஆகியவை. அமெரிக்க நாட் டினர் வெற்றியையே விரும்புகிறார்கள் என்பது நன்கு தெளிந்த விஷயம். வெற்றி பெறுகிறவர்களிடம் அசூயையோ, பொறாமையோ கொள்வதில்லை மற்றவர்கள். எல்லோ ருக்கும் உழைத்துப் பலன்பெற ச ம ச ந் த ர் ப் ப ங் க ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/35&oldid=1396066" இலிருந்து மீள்விக்கப்பட்டது