பக்கம்:கொடு கல்தா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய அமைப்பு முறைகள்

இந்தக் கலைகள், க லா நிலையங்க ள், புராணங்கள், தொகுப்புகள், அவற்றை ஆக்கும் ஓயாப்பண்பு இவற்றை உயர்வாக மதிக்கவா வேண்டும் ? பொருளையும் வாணிபத்தையும் உயர்வாகக் கருத வேண்டுமா ? - எவ்விதத் தடையும் எனக்கிலை. உயர்விடை உயர்வுகள் என்று கருதுவன்அவற்றை: எனினும் அவற்றிலும் அதிஉயர்வென மதிப்பேன்

பெண்ணும் ஆணும் பெற்றிடு மக்களை. ! அரசியல் உயர்வென நினைத்தோம். அமைப்பு முறைகள் உயர்வென மதித்தோம் அவை உயர்வல, நலமிலை என்றிடேன். அவை நன்று. உங்களுடன் நானும் அவற்றைப் போற்றுவேன். ஆயினும், உங்களிடம், மண்மிசை உள்ள மக்கள் அனைவர் மீதும் அதிக அன்பு எனக்கு உண்டு:

சிந்திக்கத் தெரிந்தவர்களின், சிந்திக்க விரும்பு கிறவர்களின், சிந்தனைக்கு இந்நூலைச் சமர்ப்பிக் கிறேன். கோரநாதன். ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/4&oldid=1395274" இலிருந்து மீள்விக்கப்பட்டது