பக்கம்:கொடு கல்தா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-42-

ரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியாப் பராபரத் தனத்திலே வளர்க்கப்படவில்லை. கலைஞர்கள், இசை வல்லுநர்கள், ஆட்டக்காரர்கள்,எழுதுவோர்,ஓவியர்கள் இவர்களில் பெரும்பாலர் செய்கிற பணிகள் எல்லாம் கதைக்குதவாத-அனாவசியமான -ஆடம்பரங்கள் தான், இன்றைய நிலையிலே. இவர்கள் இப்பணிகளைத் தொடர்ந்து நடத்துவது பற்றி நமக்குக் குறை ஏதுமில்லை. ஆனால்,தங்கள் காலத்தின் பகுதி யையாவது சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத தொழிலாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். வேலையில்லாமல்-வேலை எதுவும் செய்யாமலே வீணாக ஊர்சுற்றித் திரிகிற வெள்ளைச்சட்டைக்காரர்களே ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். நகரங்களில் ஜனக்கூட்டம் அதிகரித்து வருவதால், ரோட்டோரங்களிலும், வெட்ட வெளிகளிலும் குடும்பம் நடத்தி அவதியுறும் அன்றாடங்காய்ச்சிகன் எவ்வளவோ பேர், இவர்கள் வாழ்க்கையைச் சீருறுத்த வேண்டு மானால் நாட்டின் பல பாகங்களிலும் நா னா விதமான தொழிற்சாலைகளும் ஸ் தம்பித்து வேலையிலமர்த்தலாம். இதனால் நாட்டின் தொழிற் பெருக்கத்தையும், அதன் மூலம் பொருளாதாரத்தையும் பலம் பொருந்தியதாகச் செய்யலாம், பிச்சை எடுப்பதை குலத் தொழிலாகக் கொண்டிருப் பவர்களையும், அதிகாரப் பிச்சைக்காரர்களையும், உழைக்கத் தெம்பிருந்தும் மனமில்லாமல் பிச்சை எடுப்பதைச் சுலப மான பிழைப்பாகக் கொண்டிருப்பவர்களையும் உதைத் தாவது உழைக்கும்படி செய்யவேண்டும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/42&oldid=1395991" இலிருந்து மீள்விக்கப்பட்டது