பக்கம்:கொடு கல்தா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-43- சுகாதார விதிகளைக் காப்பாற்றத் தெரியாமல் கண்ட படி தெருக்களில் துப்பித் திரிவோரை, ரோடு, பிளாட் பாரம் முதலியவற்றை கறைபடுத்துவதோடு வியாதிக் கிருமிகளைப் பரப்புவோரை, கசையடி கொடுத்துக் தான் திருத்த வேண்டும் போலும் தெருவில் ஆள் வருவதை யும் கவனிக்காமல் புளிச் சென் வெற்றிலை எச்சிலையும், பீடி-சுருட்டுப் பிடித்துச் சுர க்கு ம் உமிழ் நீரையும், கோழையையும் கண்ணை மூடிக்கொண்டு துப்புவோரைக் கழுவிலேற்ற வேண்டும் என்று ஒருவர் எழுதினார். வேண்டியதில்லே! கசையடி கொடுத்துத் திருத்தலாம்! நாட்டிலே எண்ணற்றவர்கள் காட்டுமிராண்டித்தனமாகவே வாழ்கிறார்கள். வீதியில் நடந்து செல்வது முதல், எங்கு எப்படிப் பழக வேண்டும் என்பது வரை ஆரம்பவிதியிலி ருந்தே இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாக வேண்டும் போலும்! இனி வரும் சமுதாயமாவது ஒழுங்காக வளர் வதற்காக, சிறு குழந்தைகளாக இருக்கும் நிலையிலிருந்தே -மேல்நாடுகளில் கற்றுக்கொடுப்பது போல-நாகரிக விதிகளில் பயிற்றுவித்து வளர்க்கவேண்டும். சினிமாக்கள் பிரசுரங்கள், ரேடியோக்கள் மூலம் இன்றுள்ளவர்களைக் திருத்த ஆவண செய்யவேண்டும். இப்படி யெல்லாம் செய்தால்தான் மனிதப்பிராணிகள் மனிதர்களாக வாழ முயல்வார்கள் என்று தெரிகிறது! வீடற்று, தங்கஇடமற்றுக் திரிகிறவர்களுக்கு இருக்க இடம் செய்து கொடுக்கவேண்டியது அவசியம். இதற்கு கோயில்கள், சர்ச்சுகள் முதலியன நன்கு உதவமுடியும் என முன்பே நான் 'கோயில்களை மூடுங்கள்' எனும் புத்தகத்தில் வலியுறுத்தியிருக்கிறேன். வெளவால்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/43&oldid=1395947" இலிருந்து மீள்விக்கப்பட்டது