பக்கம்:கொடு கல்தா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–45 –

நாட்டிலே இடமிருக்கிறது. உபயோகப் படுத்தாமல் இயற்கை வளங்கள் மல்கிக் கிடக்கின்றன. இவற்றைப் பிரயோசனப்படுத்தும் திட்டங்கள் காணும் திறமையாளர் கள் வேண்டும். திறமையாளர்களுக்கு உதவுகிற செல்வர் கள் வேண்டும். ஆள்வோரின் ஆதரவும் தேவை. இன்னும் எவ்வளவோ செய்யலாம். நான் சொல்பவை எல்லாம் செயலுக்கு உதவாத கனவுகள் என்று இப்போது பலருக்கு தொனிக்கலாம். ஆனால், மேல் நாடுகளிலே, முக்கியமாக ரஷ்யா விலும் அமெரிக்காவிலும், இவற்றை விட அற்புதங்கள் பல சாதிக் கிறார்கள். இன்னும் என்னென்ன சாதிக்கலாம் என்று ஆராய்ந்து வருகிறார்கள். செயற்கை முறையால் மழை பொழியச் செய்கிறார்கள்; சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத் துக்கும் தொடர்பு ஏற்படுத்த அரும்பாடு பட்டு வருகிறார் கள். இன்னும் அளப்பரிய அசகாய சூரத்தனங்கள் பற் பல புரியத் தயாராக் இருக்கிறார்கள். நம் நாட்டினரும் மனிதர்கள் தானே ! உலகத்துக்கே போதித்து உய்யும் வழி காட்டிய உத்தமர்கள் வழி வழி வந்தவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதுமா? மூளைபலம் மிக்கவர்கள் நம் நாட்டினர் என்று வீராப்பு பேசினால் பெருமை வந்துவிடுமா? உலகில் பிற நாடுகள் செயல் திறத்தில் பலமுற்று வருவது போல், நம் நாடும் ஆக்க வேலையில் நன்கு பலமடைய வேண்டும். இந்த நிலை எய்துவதற்கு தடையாக இருக்கும் சிறு மைகளை வளர்க்கும் பண்புகளுக்கும் பண் பி ன ரு க்கு ம் கொடுங்கள் கல்தா! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/45&oldid=1395944" இலிருந்து மீள்விக்கப்பட்டது