பக்கம்:கொடு கல்தா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. விழுங்குக மக்களை ' உலகத் துயரனத்தும் காண்கின்றேன். தாழ்வுகள், அவமானம் அனைத்தையும் நான் பார்க்கிறேன். செயல்கள் சில செய்தபின்னர், மனம் புழுங்கி, வேதனையோடு விம்முகிற வாலிபர்களின் அழு கையை நான் கேட்கிறேன். , - பிள்ளைகளால் கவனிக்கப்படாமல்,பெற்றதாய் ஆதரவற்று, அநாதையாய், செத்துக்கொண் டிருப்பதை நான் காண்கிறேன்.கணவனால் கைவிடப்பட்ட மனைவியை, இளம்பெண்களை இழிவுபடுத்தும் துர்த்தர்களை, பொறாமைக் கொதிப்பை, காமலீலைகளை -இவற்றை மறைக்க எழும் முயற்சிகளை மண்ணிலே தான் காண்கிறேன். யுத்தத்தின், பஞ்சத்தின், வஞ்சகக் கொடுஞ் செய லின் வேலைகளைக் காண்கிறேன். வீரமரணம் பெறுவோரையும், கைதிகளையும் காண்கிறேன். கடல்மீது பஞ்சம் மற்றவர் வாழ்வதற்காக எவன் உயிர் துறப்பது என்று சீட்டுக்குலுக்கி விதியை நிர்ணயிக்கிற மாலுமிகளைக் காண்கிறேன். உழைப்போர், ஏழைகள், நீக்ரோவர் மீது, இவர் போன்ற இன்னும் எவ்வளவோ பேர்கள்மீது ஆணவம் மிக்கோர் அழுத் தும் கொடுமைகளை, இழிவுகளைக் காண்கிறேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/5&oldid=1395285" இலிருந்து மீள்விக்கப்பட்டது