பக்கம்:கொடு கல்தா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் செயல்முடிவை எய்திவிட்டது; அதன் சக்தி அவ்வளவுதான் இனி மனித வர்க்கம் நசித்துப் போகும் என்று குறித்துவிட்டார் .இப்போது கூடச் சில அறிஞர்கள் மனித வர்க்கம்

சர்வ நாசத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதென்று எழுதியும் பேசியும் வராமலில்லை!உயிர் குலத்தி ற்கே எச்சரிப்பு போல் பேரறிஞர் பெர்னாட்ஷா முன்பே எழுதியிருக்கிறார்- இயற்கை உயிர்ச் சக்தியை வைத்து பரிசோதனைகள் செய்து வருகி றது. இத்தகைய சோதனையின் பிந்திய விளைவுதான் மனித வர்க்கம். மனித வர்க்கம் சிருஷ்டி சக்திக்கு திருப்தி அளிக்காவிடில், தோல்வி என்று படுமானால், ஆரம்ப காலத் தில் உலகில் வாழ்ந்த ராட்சச மிருகங்களை அழித்துவிட்டது போல, மனித வர்க்கத்தையும் மண்ணோடு மண்ணாக்கிவிட இயற்கை தயங்காது.” . இயற்கையின் அழிவுக் கருவிகள் எவ்வளவோ வெள்ளம், தீ, பூகம்பம், பஞ்சம், கொடுநோய் இப்படிப் பலபல.

மனித குலத்தை இயற்கையே வாழவிடாமல் அடிப்பதற்கு முன்னரே, மனிதர்களே மாய்த்துக் கொள்கிறார்கள்.நல்வாழ்வு

வாழ வகை எங்கிருக்கிறது? நல்லவர்கள் வாழ இடமெங்கிருக்கிறது

எத்தர்களும், சுயநலமிகளும், குள்ளநரித்தனக் கள்ள நெஞ்சினரும், தாம் வாழப் பலரைக் காவு கொடுக்கத் தயங்காத கயவர்களும், கறுப்புச் சந்தைக் கழுகுகள், உழைப்பைச் சுரண்டும் உலுத்தர்கள், உரிமையை மறுக் கும் பண மூட்டைகள், பிறரை மனிதராகக் கருதாத அட்டைச் செயலினர் முதலிய சதிகாரக் கூட்டங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/8&oldid=1395304" இலிருந்து மீள்விக்கப்பட்டது