பக்கம்:கொய்த மலர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கொய்த மலர்கள் அத்துணை விரிவடையவில்லை. சங்க காலத்து இறுதி யிலும் அதை ஒட்டிய காலத்திலுமே பெளத்தமும் அதை அடுத்துச் சமணமும் தமிழ் நாட்டில் கால்கொள்ளத் தொடங்கின, எனவே, சங்க காலத் தமிழ் காட்டின் சமயம் சைவம் என்று திட்டமாகக் கூறலாம். சிவனைப் பற்றிய பலவகையான கதைகளும் தோற்ற விளக்கங் களும் அக்காலத்தில் தமிழ் நாட்டில் கிறைந்திருந்தன. சங்க காலத்தில் சில சமயங்கள் வாழ்ந்தன என்ருலும், அவற்றுள் மாறுபாடு இல்லை. ஒற்றுமை அவற்றின் அடிப்படையில் சிறந்தது. எனவே, எந்தச் சமயத்தைச் சார்ந்து நின்ற போதிலும் அக்காலத்தில் அவர்கள் ஒற்று மையாகவே வாழ்ந்தார்கள். திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் சங்ககாலத்தில் சிவன் பிறவா யாக்கைப் பெரி யோனகி முதலிடத்தில் வைத்துப் போற்றப்படுகிருன். அவனுடைய பல்வேறு சிறப்பியல்புகள் சங்க இலக்கி யங்களில் நன்கு பேசப்படுகின்றன. ஆம்; சங்க காலத்தை அறிவதற்கு அக் கால இலக்கியங்களை அன்றி வேறு சான்றுகள் நமக்குக் கிடையா. எனவே, அச் சான்றுகளைக்கொண்டே நாம் சங்ககாலச் சைவத்தைக் காணமுடிகின்றது. அக் காலத்தில் பிற்காலத்தே இறை "வன முன்னிறுத்திப் பாடியதாக உள்ள தோத்திரப் பாடல்களைப் போன்ற பாடல்கள் இல்லை. திருமுரு காற்றுப் படையும், பரிபாடலும், முருகன், திருமால் ஆகிய இருவரைக் குறித்த பாடல்களாக, அவ்வாறு இறைவனை முன்னிறுத்திப் பாடும் வகையில் அம்ை கின்றன. அவற்றுள் முருகன் புகழும் திருமால் சிறப்பும் நன்கு விளக்கப் பெறுகின்றன. முருகன் தமிழ் நாட்டு ஆறுபடை வீடுகளில் தங்கியதோடன்றிக் குன்றுதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/42&oldid=812492" இலிருந்து மீள்விக்கப்பட்டது