பக்கம்:கொய்த மலர்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்க காலச் சைவம் 41 ருடுங் குமரய்ை 'அஞ்சல் என்று அண்டி வருபவரை ஆதரிக்கும் வள்ளலாய்க் காட்சி தருகின்ருன். பரி பாடலில் அவன் முன்னின்று அடியவர் வேண்டும் வரம் வையத்தை வாழவைக்கும் வரமாக அமைந்துள்ளது. பரிபாடலில் திருமால் ஆதிமூலமாக அனைத்தையும் தோற்றிப் படைத்துத் துடைக்கும் செல்வகைப் போற்றப் படுகின்ருன். இவ்விரு பெருங்கடவுளரையும் முன் னிறுத்தி அடியவர் வேண்டி விடுத்த விண்ணப்பங்கள் பல. நாம் ஈண்டு அவற்றையெல்லாம் ஆராய வேண்டா. திரு முருகாற்றுப்படை சைவ இலக்கியத் தொடர் வரிசை யிலே பதினேருந் திருமுறையிலேயும் இடம் பெற்றுள் ளது. எனவே, சைவ உலகம் அதை ஓதி உணர்ந்து உற்றதொரு பயன் கண்டுள்ளது. எனவே, இன்று இத் தகைய முன்னிறுத்திப்பாடும் இலக்கியங்களை விடுத்துப் பிற சங்க இலக்கியங்கள் வழி அக்காலச் சிவவழி பாட்டைக் காண விழைகின்றேன். - பிள்ளையார் இன்று சைவசமயத்தைப் பற்றிப் போற்றுகின்ற அடியவர்கள் சிவன், அம்மை, முருகன், பிள்ளையார் ஆகிய வர்களேயே முக்கியமாகப் போற்றுவர். எனினும், பிள்ளை யாரைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பே காணப்பெறவில்லை. ஏழாம் நூற்ருண்டில் பரஞ்சோதி யாரின் வாதாபியின் படை எடுப்புக்குப் பின்பே அவர்வழிப் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் நுழைந்தது என்பது ஆராய்ச்சியின் துணிபு. இலக்கியங் களிலும் முதன்முதல் ஞானசம்பந்தர் தேவாரமாகிய பிடியதன் உரு உமைகொள' என்ற பாட்டிலேதான் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.