பக்கம்:கொய்த மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்க காலச் சைவம் 43 'குருடை முழுமுதல் தடிந்த பேரிசை கடுஞ்சின விறல்வேள்” (பதிற். 11) எனக் காட்டுகின்றது. இம் முருகன் கரிய மணமிக்க கடம்ப மலர் அணிக் திருந்த சிறப்பை, * 'கார் நறுங் கடம்பின் பாசிலத் தெரியல் சூர்கவை முருகன்'- (புற. 38) எனப் புறநானூறு எடுத்துக் காட்டுகின்றது. இம் முருகனைப் போற்றும் வழியறிந்து வழிபாடி யற்றும் முறையே முருகாற்றுப் படையாகப் பின் உருப் பெற்றது என்ற உண்மையை, அகநானூற்றில், 'உருவச் செந்தினை குருதியோடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்' (அகம். 20) என்று வெறிபாடிய காமக் கண்ணியார் அழகுபடக் காட்டுகின்ருர். இம்முருகனது வெறிச் சிறப்பைப் பாடிய தால்தான் போலும் அவர் வெறிபாடிய' என்ற அடையால் பாராட்டப்பெற்ருர். எனவே, முருகன் சங்க காலத்தே கொற்றவையின் மைந்தனக-வெற்றி விளேக் கும் விறலோகை விளங்கினன் என்பது நன்கு போதரும். சிவனும் திருமாலும் திருமால் வைணவ சமயத்து முதற்பெருங் தெய்வ மாகப் போற்றப்படினும் சிவத்தொடு இணைத்தே சைவர் கள் வழிபடுகிருர்கள். அரியலால் தேவி இல்லை' எனப் பிற்காலத்தே அப்பர் பாடினர். திருமலையில் உள்ள இறைவனேப் பாடிய ஆழ்வார் 'திரண்டருவி பாயும் திரு மலே மேல் எந்தைக்கு இரண்டுருவம் ஒன்ருய் இயைந்து இருந்ததென நலம் தோன்ற நன்கு காட்டுகின்ருர். சைவர் கோயில்களில் திருமால் உருவமும் கிலத்த இடம் பெற்றிருப்பதை இன்றும் காண்கிருேம். சங்க காலத்