பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98
கொல்லிமலைக் குள்ளன்.pdf


அவர் குள்ளனுடைய கண்ணில் படாமல் கூடல் பட்டணம் போய்ச் சேருவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர்கள் சுமார் 2 மணி நேரம் நடந்திருப்பார்கள். அப்பொழுது ஏரி கண்ணிலே தென்பட்டது. அது மிகவும் விசாலமான ஏரி. மழை பெய்யும்போது மலையில் இருந்து பல ஓடைகளின் வழியாக அதில் வெள்ளம் வந்து சேரும். வெள்ளம் அதிகமாக இருந்தால் அந்த ஏரியிலிருந்து நீர் வழிந்து வஞ்சியாற்றை அடையும். சாதாரணமாக அந்த ஏரி எப்பொழுதும் நீர் நிறைந்து இருக்கும். ஆனால், சுற்றிலுமுள்ள மலைக்காடுகளுக்கு இடையே இருப்பதால் அதை யாரும் எந்த வகையிலும் பயன்படுத்துவதில்லை. அந்தப் பக்கத்திலே நடமாட்டமே இராது. அதனால் அது குள்ளனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தச்சுப்பட்டறையில் செய்த மரப்பொம்மைகளைப் பரிசலில் ஏற்றி, அதன் வழியாக மேலே இருக்கும் குகைக்கு எடுத்துச் செல்வதும், அங்கே பொம்மைகளுக்குள் திருடிய சிலைகளை வைத்து மறைத்துப் பிறகு வர்ணமடித்து எடுத்துக்கொண்டு வருவதும் அவனுக்கு எளிதாக இருந்தது. யாருக்கும் இந்த விவரம் தெரியாதபடி