பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
105
கொல்லிமலைக் குள்ளன்.pdf

மணியும் பதிலளித்தான். அவர்களுடைய பேச்சைக் கேட்டு அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

"எனக்கு ஒன்றுதான் விளங்கவில்லை- இத்தனை இரகசியமாகத் தனது ஆள்களுக்கும் தெரியாமல் திருட்டுத்தொழில் நடத்தியவன் எதற்காகத் தன் பெயரைப் பச்சை குத்திக் கொண்டான்?" என்று தங்கமணி ஆழ்ந்த யோசனையோடு தன் தந்தையைக் கேட்டான்.

"அதைச் சுலபமாக மற்றவருக்குத் தெரியாமலிருக்கும்படி செய்துவிடலாம் என்று அவன் நினைத்திருப்பான். ஜிப்பாவைப் போட்டாலே மறைந்துவிடுகிறதே" என்றார் வடிவேல்.