பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

 ஐயத்திற்கிடமின்றிக் காட்டுவது என்பன போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

வடிவேல் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது கண்ணகியும் சிறுவர்கள் இரண்டு பேரும் பாதி உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து அவர், “நாளைக்குக் காலையிலே நாம் வஞ்சியூர் என்ற கிராமத்திற்குப் போகலாம். அங்கே அங்காளம்மன் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது” என்றார் வடிவேல்.

"கிராமத்துக்கா? நாளைக்கே போகலாமா?" என்று உற்சாகமாகத் தங்கமணியும் சுந்தரமும் கூவினார்கள். "இப்பவே போகலாம், அப்பா" என்று கத்தினாள் கண்ணகி. “எத்தனை நாளைக்குத் திருவிழா? அங்கேயே இந்த விடுமுறை முழுவதும் இருக்கலாமா?" என்று கேட்டான் சுந்தரம், "அப்பா, ஜின்காவையும் அழைத்து வருகிறேன்" என்றான் தங்கமணி.