பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புலப் படவில்லை. துக்கம் அப்படி அவளைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவள் கண்களிலே கண்ணிர் வழிந்தோட லாயிற்று. ஆனால், சற்று நேரத்திலே அவளுக்கு ஒரு தெளிவு பிறந்தது. இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று அவளுக்குப் புலப் பட்டது. அதனால் அவள் உடனே செயலில் இறங்கினாள். தங்கமணிக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் முதலில் எழுதினாள். அருமைக் குழந்தைகளே. நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது. அந்தக் குள்ளன் அப்பாவையும் ஏமாற்றி எங்கோ அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் நீங் கள் தைரியமாய் இருங்கள். இப்பொழுதே ஒரு பரிசலில் சில போலீஸ் வீரர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுப்புகிறேன். அப்பாவைக் கண்டுபிடிக்க வும், குள்ளனைக் கைது செய்யவும் முயற்சி செய் கிறேன். போலீஸ் வீரரோடு காரிலேயே புறப்பட்டு, கொல்லி மலைக்கு மறுபக்கத்தில் உள்ள கூடல் பட்டணத்திற்கு நான் வந்து சேருவேன். அங்கே சந்திப்போம். கடவுளை நம்பி, தைரியத்தை விடாமல்