பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 ఫ్రీC 竺登引 'மரம் பெயர்ந்து வந்துவிட்டால் என்ன செய்வது ?" என்று தடுமாற்றத்தோடு கண்ணகி கேட்டாள். "விடிவதற்குள் அப்படி ஒன்றும் எற்பட்டுவிடாது. வெளிச்சம் வந்த பிறகு இந்த மரத்தின் உதவி இல்லாமலேயே நாம் சமாளித்துக்கொள்ளலாம்" என்று தைரியமூட்டினான் சுந்தரம். "விடிவதற்குள்ளே ஜின்காவும் வந்து சேர்ந்துவிடும்' என்று நம்பிக்கையுடன் தங்கமணி பேசினான். 'பரிசல் இப்படி ஒரே இடத்தில் நின்றால் ஆபத்து இல்லையா, அண்ணா ? இப்போது ஒரு முதலை வந்து, அதன் வாலால் வீசி அடித்தால் என்ன செய்ய முடியும் ' என்று கேட்டாள் சிறுமி. 'முதலை வாலை வீசினால் தலையை வாங்கிவிட்டால் போச்சு' என்றான் சுந்தரம். "இங்கெல்லாம் முதலையே இருக்காது. பயப்படாதே" என்று ஆறுதல் கூறினான் தங்கமணி.