இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"அந்தப் பஞ்சாப்காரர் எத்தனை வேகமாக நீந்தினார் பார்த்தாயா ? நீச்சல் போட்டிக்குச் சரியான ஆள்" என்றான் தங்கமணி.
"பனை மரத்திலே பாதி இருந்தால் நீகூட அப்படி நீந்தலாம்" என்றான் சுந்தரம்.
"போடா, உனக்கு எப்பொழுதும் கேலிதான். அந்த சிங் ரொம்ப உயரந்தான். இத்தனை உயரமான ஆளை நம்ம பக்கத்தில் கண்டு பிடிப்பது கடினம், நீச்சல் குளத்திலே மேல் தட்டிலிருந்து அவர் குதிக்கும்போது பார்க்க வேடிக்கையாக இருந்தது."
"மரீனா நீச்சல் குளத்தையே ஒரு கலக்குக் கலக்கி விட்டார்" என்று மேலும் என்னவோ சொல்லச் சுந்தரம்