பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59

விடச் சொல்லித்தான் அப்பாவுக்குச் சீழ்க்கையடித்தேன்” என்று மருதாசலம் தெரிவித்தான்.

“அதற்கு வேறு யாரும் வேண்டாம். டேய் ஜின்கா இங்கே வா” என்றான் தங்கமணி.

தங்கமணியின் சமிக்கைகளைப் புரிந்துகொண்டு ஜின்கா மேலே நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தது. அந்த இடத்தில் மலை செங்குத்தாகவும், வெறும் பாறையாகவும் இருந்ததால் நேராக மேலே ஏறுவதற்கு முடியாது. அதனால் ஜின்கா ஆற்றில் குதித்துக் கரையோரமாகவே ஆற்றின் நீரோட்டத்தோடு கொஞ்ச தூரம் நீந்திச் சென்றது. எல்லாரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜின்கா மரங்கள் வளர்ந்துள்ள ஒரு பகுதியை அடைந்ததும் கரையை அடைந்து, ஒரு உயர்ந்த மரத்தின் மேலே தாவி ஏறிற்று. அந்த மரத்தின் உச்சியிலிருந்து மலையின் சாரலில் உள்ள மற்றொரு மரத்தின் கிளைக்குத் தாவிற்று. அங்கிருந்து மலையில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல்லின்மீது குதித்தது; பிறகு,

கொல்லிமலைக் குள்ளன்.pdf