உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


யை இறுக இருகைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவன் மூக்கைப் பிடித்துத் தன் கூர்மையான பற்களால் கடித்தது. அதே சமயத்தில் பயங்கரமாகக் கூச்சலிட்டது.

இப்படிப்பட்ட தாக்குதலைக் குள்ளன் எதிர்பார்க்கவே இல்லை. தன்னைத் தாக்கியதுகூட என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. குகையில் வாசம் செய்த பேயோ, பூதமோ தன்னைத் தாக்குவதாக அவன் பயந்து வெலவெலத்துப் போனான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் பீரிட்டு வழிந்து சட்டையெல்லாம் நனைந்தது. அவன் இரண்டு கைகளாலும்