பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 தில்லைநாயகத்தைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியே வந்தார்கள். ஜின்கா தங்கமணியின் கருத்தை அறிந்துகொள்ள முடியாமல் திகைப்போடு அவன் தோள்மேல் ஏறிக்கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. {5 கண்ணகி, நீ படுத்துத் தூங்கிய இடத்திற்குத்தான் எல்லாரும் போக வேண்டும். இங்கு மருதாசலத்தின் தந்தை மட்டும் இருக்கட்டும். வாருங்கள், அங்கே ஒடி மறைந்து கொள்ளுவோம்' என்று கூறிக்கொண்டே தங்கமணி முன்னால் ஓடினான். தில்லைநாயகத்தைத் தவிர, மற்றவர்கள் அவனைத் தொடர்ந்து ஒடிப் பாறையின் திருப்பத்தில் ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள். நூலேனிவழியாக ஏறிவருகின்றவர்களைத் தில்லைநாயகம் பழைய வழக்கப்படி வரவேற்றார். ஐந்து பேரும் வந்தவுடன், 'எஜமான் குகைக்குள்ளே இருக்கிறார். எங்கோ போய்விட்டு இப்பத்தான் வந்தார். உங்களை அங்கே கூப்பிடுகிறார்” என்று தில்லைநாயகம் சொன்னார். ஐவரும் வேகமாகக் குகைக்குள் துழைந்தனர். உடனே தில்லைநாயகம் குகைக்கதவை இழுத்து வெளியே நன்றாகப் பூட்டிவிட்டார். பிறகு, அவன் வெளியில் சிறிது தூரம் ஓடிச்சென்று சீழ்க்கையடித்தான். அதைக் கேட்டதும் தங்கமணி முதலிய வர்கள் திரும்பி ஓடி வந்தனர். 'மருதாசலம், வா. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் யாரென்று பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி நூலேணியில் அவசரமாக இறங்கலானான். 'இந்தாடா. இது கையிலிருக்கட்டும்" என்று சுந்தரம் ஓடிவந்து, பேனாக்கத்தி யைக் கொடுத்தான். மருதாசலமும் கீழிறங்கினான். தங்கமணி தன்னைக் கூப்பிடுவானே என்று ஜின்கா எதிர் பார்த்து நின்றது. ஆனால். அந்தச் சமயத்தில் அவன் அதை