பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 முற்றிலும் மறந்துவிட்டான். கீழே செல்ல வேண்டும் என்று அவனுக்கு ஒரே துடிப்பு. பரிசலில் கட்டுண்டு கிடந்தவர் அவன் தந்தை பேராசிரியர் வடிவேலுதான். அவன் நினைத்தது சரியாகிவிட்டது. அவன் விரைவில் தந்தையின் கட்டை அவிழ்க்கலானான், 'தங்கமணி, நீ எப்படி இங்கே வந்தாய் ? இந்த ஆள் யார்?" என்று வடிவேலு வியப்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டார். "அப்பா, அந்தக் குள்ளனையும் நாங்கள் பிடித்து விட்டோம். எல்லாம் ஒரு பெரிய கதை. வாருங்கள், மேலே போகலாம். கண்ணகியும் சுந்தரமும் அங்கே இருக்கிறார்கள்' என்று குதூகலத்தோடு தங்கமணி கூறிக்கொண்டே எனியிருக்குமிடத்தை நோக்கி ஓடினான். 'இது யாரென்று சொல்லவில்லையே!" என்று கேட்டுக் கொண்டே வடிவேலு பின்னால் வந்தார்.