பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


& I அடிவைத்து முன்னால் சென்றார். மற்ற இருவரும் பின்னா லேயே வந்தனர். வளைந்து வளைந்து மூவரும் சென்றார்கள், சில இடங்களில் குனிந்துகொண்டு செல்ல வேண்டியிருந்தது. கடைசியில், ஒரு வளைவில் திரும்பிய உடனே வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. அது வழியாகத் தவழ்ந்துகொண்டு தான் போக முடிந்தது. அப்படிக் கொஞ்ச தூரம் வடிவேல் மட்டும் சென்று பார்த்தார். மலைப்பாறையின் கோடியிலே ஒரு பெரிய துவாரம் இருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்த போது கீழே வெகு ஆழத்திலே வஞ்சியாறு ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால், மலை ஒரே செங் குத்தாக இருந்ததால் அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு யாதொரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மேலே தேடுவதில் பயனில்லை என்று வடிவேலு, பின்புற மாகவே தவழ்ந்து, மற்றவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். "எப்படியோ அந்தக் குள்ளன் எமாற்றிவிட்டான். ஆனால், நான் போலீசின் உதவியைக்கொண்டு அவனைப் பிடிக்காமல் விடப்போவதில்லை. திரும்பிப் போவோம் வாருங்கள் என்று கூறிக்கொண்டே வடிவேலு நடந்தார். ரகசியக் குகையின் வெளிக்கதவை மூடி, குறுக்குச் சட்டத்தைப் பொருத்திவைத்துவிட்டு மூவரும் தங்கமணி முதலியவர்கள் இருக்குமிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். கைதியாகக் குள்ளனைப் பிடித்துக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த தங்கமணியும் சுந்தரமும் கண்ணகியும் பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள். அதுவரையில் உற்சாக மாக ஏதேதோ வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் வாடிப்போய்விட்டது. "அப்பா, குள்ளனைப் பிடிக்காவிட்டால் போகிறது. அம்மாவிடம் போகலாம்" என்ற கவலை நிறைந்த குரலில் கண்ணகி கூறினாள். கொ. ம. கு-6