பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ö4 இருக்கும் இடத்திற்கு வந்தது. எதிர்பாராத விதமாக நூலேணி கீழே தொங்கிக்கொண்டிருப்பதைத் தொலைவில் வரும் போதே அவன் கண்டு திகைப்படைந்தான். அது வழக்கமாக மேலே இழுக்கப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். அது எதற்காகத் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று அவன் மலைத்தான். அதற்குள் பரிசல் நாலேணிக்குச் சற்று அருகில் வந்துவிட்டது, அங்கே கரையில் ஒரு பரிசல் இழுக்கப்பட்டுக் கிடப்பதையும் கண்டு மேலும் அவன் திகைப்படைந்தான். உடனே அவன் பரிசலை அங்கு நிறுத்தும்படி கட்டளை யிட்டான். பரிசல் நின்றதும் கொல்லிமலைக் குள்ளன் கீழே இறங்கி விரைந்து சென்று, அங்கே இருந்த பரிசலை உற்றுக் கவனித் தான். தாழிவயிறன் தங்கமணி முதலியவர்களைத் தேடிப் பிடிக்க அனுப்பப்பட்ட பரிசல் அதுவல்லவென்றும். அப்பரிசல் தங்கமணி முதலியவர்களைக் காட்டிற்கு எற்றிச் செல்ல உதவிய