உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86

தெரியும். அதனால் கதவருகிலே போய் அதைத் திறக்க முயற்சி செய்து காலத்தை வீணாக்க முயலவில்லை.

அவன் சுரங்க வழியிற் புகுந்து குனிந்தும் தவழ்ந்தும் முன்னேறிச் செல்லலானான். சிறிது நேரத்தில் அவன் வஞ்சியாற்றின் பக்கத்திலிருந்த மலைத் துவாரத்திற்கே வந்துவிட்டான். பேராசிரியர் வடிவேலும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தாரல்லவா ? அந்தத் துவாரத்தின் வழியாகத் தப்பிப் போக முடியாது என்று அவர் நினைத்தார். எனென்றால், அது செங்குத்தான மலைப்பகுதியில் ஆற்றுமட்டத்திற்குமேல் சுமார் இரு நூறு அடி உயரத்திலிருந்தது. அங்கிருந்து ஆற்றில் குதித்தால் உயிர் பிழைக்க முடியாது. அதனால் அதன் வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் போயிருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

ஆனால், குள்ளன் தப்புவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்திருந்தான். ஆகவே, எப்படியாவது அந்தத் துவாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அவன் உறுதிகொண்டான். படுத்து ஊர்ந்துகொண்டிருக்கும் நிலையில்தான் அந்தத் துவாரத்தின் வழியாக எட்டிப் பார்க்க முடியும். பேராசிரியர் வடிவேல் அதன் வழியாகக் கீழே குனிந்து ஆற்றைத்தான் கவனித்தார். கீழிருக்கும் மலைப்பகுதியையும் கவனித்தார். ஆனால், அவர் மேலே நிமிர்ந்து பார்க்கவில்லை. குள்ளனோ எல்லாப் பக்கமும் பார்த்துவிட்டு மல்லாந்து படுத்து மேலேயும் பார்த்தான். அங்கே சுமார் பத்தடி உயரத்தில் பாறை இடுக்கில் எப்படியோ முளைத்து வளர்ந்த இச்சி மரத்தின் வேர்களில் ஒன்று, பாறையோடு ஒட்டினாற்போல அந்தத் துவாரத்திற்கு ஓரடி உயரத்திலே வந்து, வலப்புறமாகச் சென்றிருந்தது. குள்ளன் தனது வலக்கையை வெளியே நீட்டி அந்த வேரைப் பிடித்தான். வேர் கையின் அளவு பருமனுடையதாகவும். உறுதியாகவும் இருந்தது. இன்னும் கொஞ்சம் உயரத்திலே அது பாறையோடு ஒட்டாமல் பிடிக்க வசதி யாகவும் இருந்தது. அது ஒன்றுதான் தப்புவதற்கு வழி என்று குள்ளனுக்குத் தோன்றிற்று. ஆகவே, தனது இருகைகளாலும்