பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


هم

எஸ்.நவராஜ செல்லையா o,

.*

99

ドー。

ஒடியோ அல்லது ஒடி விரட்டுவோருக்கு அருகாமையில் சென்றோ அந்தத் தாக்குதலைத் தங்கள் மேல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யும்போது, சுமாரான ஆட்டக் காரர்கள் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பேற்படுகிறது. ஒய்வெடுத்துக் கொள்ளவும் முடிகிறது. ஒர் விரட்டுபவர் வேறொருவரை விரட்ட நேரும்போது, அவர்களுக்குக் காலதாமதம் ஏற்படவும் வழிவகுத்துத் தருகிறது.

10. சங்கிலி ஒட்ட முறையில், ஒடித் தப்பித்துச் செல்பவர்கள் நடுக்கோட்டை ஒருபுறமாக ஒட்டினாற் போல் ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, மறுபுறமாகத் துரத்திக் கொண்டு வருபவர்கள், தங்கள் கை எட்டுகின்ற அளவுக்கு நீட்டித் தொடவும் முயற்சி செய்வார்கள். அத்தகைய சமயங்களில், ஒட்டக்காரர்கள் உடனே குனிந்து, கைபடாமல் தப்பித்துக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

11. ஒரு ஒட்டக்காரரையே குறி வைத்து விரட்டித் தொடுவதற்காக, எதிர்க் குழு மேற்கொள்ளும் முயற்சியில் இடையே புகுந்து அவர்களது முயற்சியை திசை திருப்பும் முறையையும் மேற்கொண்டும் ஆடலாம்.

12. ஆடுகின்ற ஆடுகளத்தின் தரையானது இழுக்கலாக இருந்தாலும், அடிக்கடி வழுக்கிவிழ நேரிடலாம். அப்பொழுது காலை ஊன்றி கவனமாக ஒட வேண்டும். அவசரப்பட்ாமல் நிதானமாக் ஒட வேண்டும்.

ஆடுகளத்தின் தரை மிருதுவாக சற்று மணற் 'ப்புள்ளதாக அமைந்திருந்தால், ஒட்டக்காரரின் வேகத்தை மிகுதியாக்காமல் கட்டுப்படுத்தும். அப்பொழுது அதற்கேற்ப, ஒடிட வேண்டும்.