பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கோகோ ஆட்டம்


 சில சமயங்களில் ஆடுகளத்தின் தரையானது கடினமானதாக அதாவது கட்டாந்தரையாக அமைந்திருக்கும். அப்பொழுது வேகமாக ஒடுகின்றவர்களுக்கு நினைத்த உடன் ஒட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத தன்மையில் இருக்கும். அப்பொழுது நிதானமாக ஒடவேண்டும்.

13. எந்த ஒட்டக்காரரும், விரட்டுகின்ற குழுவின் விரட்டும் தந்திர முறைக்கேற்பவே தனது ஒட்ட முறையை மாற்றி அமைத்துக் கொண்டு ஒட வேண்டும். அதுவே அவர்களுக்கு வெற்றிகரமான ஆட்ட முறையாகவும் அமைந்துவிடும்.

14. விரட்டுகிறவரின் நோக்கம் எதுவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, ஆட வேண்டியது அறிவுடையோர்க்கு அழகாகும். முன்னுணரும் அறிவு இல்லாத ஆட்டக்காரர்கள் வெகு விரைவில் வெளியேற்றப்படுவார்கள்.

அதனால் ஒரு ஒட்டக்காரர் சுறுசுறுப்பு உள்ளவராக, கண்ணோட்டம் நிறைந்தவராக, சிறந்த முடிவெடுக்கக் கூடியவராக, எதையும் விரைந்து செயல்படுத்துபவராக அஞ்சா நெஞ்சுடையவராக இருக்க வேண்டும்: இதனால்தான், ஆட்டக்காரர் என்பவர் உடலாலும் மனதாலும் திறம் நிரம்பியவராக இருக்கவேண்டும் என்று ஆட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

பொறுப்புள்ள ஆட்டக்காரர் என்பவர் யார் என்றால், தன்னுடைய கடமையை சரிவரச் செய்கின்றவர் மட்டும் அல்ல. விதிகளை மீறி செய்யத் தகாதவைகளையும் செய்யாமல் இருக்கின்றவரே. பொறுப்பு வாய்ந்த ஆட்டக்காரர் ஆவார்.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/102&oldid=1377506" இலிருந்து மீள்விக்கப்பட்டது