பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நிமிடத்திற்குள்ளே கால்கள் ஆட்டங்கண்டுவிடும். மேல் மூச்சு வாங்க, மேனியெல்லாம் வலிப்பதுபோல் உணர, நிற்கவே இயலாத அளவுக்குக் களைத்துப் போய் விடுகின்ற தன்மையிலே தான் கோ கோ ஆட்டத்திலே நேர்ந்துவிடுகிறது.

அதனால், கோ கோ ஆட்டக்காரர்கள் தங்கள் நினைவுகளில் கொண்டிருக்கின்ற தவறான எண்ணத்தை முதலில் துடைத்தெறிந்துவிட வேண்டும். 'கோ கோ போட்டி நடக்க ஒரு வாரம் இருக்கிறதென்றால், அதற்கு முன் ஆடுகளத்திற்கு வந்து பயிற்சி செய்துவிட்டால் போதும். முன்னர் கற்றுக் கொண்ட திறன் நுணுக்கங்கள் (Skills) எல்லாம் எளிதாக வந்துவிடும்’ என்று நினைத்தவாறு பயிற்சி செய்ய முயல்பவர்களே அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

இந்த நினைவிலே, ஆடுகளத்தின் பக்கமே வராதவர்கள் அதிகம். இத்தகைய செயல்களின் விளைவானது, முன்னேறி வருகின்ற ஆட்டக்காரர்களின் திறன்களை முனை மழுங்கிய கத்தி போல, ஆக்கி விடுகின்றன. அதனால், ஒருவித நற்பயனும் ஏற்படாமலே தான் போகின்றன. கற்ற கலை நுணுக்கங்கள் தேவையான நேரத்திற்குக் கை கொடுக்காமல் போனால், அவ்வாறு முயற்சி செய்து கற்றதனால்தான் என்ன பயன்? இதனை கோகோ ஆட்டக்காரர்கள் உணர வேண்டும். உடலைத் தொடர்ந்து பண்படுத்துகின்ற பயிற்சிகளுடன், கட்டாகவும், கவினாகவும் வைத்திருக்கப் பழக வேண்டும்.

'நீண்ட தூரம் ஒடிக் கொண்டிருக்கிறேனே! இது போதாதா எனக்கு? எனது நெஞ்சுரம் இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/104&oldid=1377514" இலிருந்து மீள்விக்கப்பட்டது