பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 氯勘 கோகோ ஆட்டம்

-

இத்தகைய குணாதிசயங்களை வளர்த்துக் கொள்வது உடலைத் தங்கள் வசம் கட்டுப்படுத்திக் கொள்வது போலவே, மனதையும் தங்களது லட்சிய நோக்கிற்குள் ஆட்படுத்திவிட வேண்டும். அவ்வாறு செய்துவிடுவதானது, விரைவாக செயல்படவும், நேரம் கிடைக்கும் பொழுது ஒய்வெடுத்து விரைவாகக் களைப்பினை நீக்கி விட்டு, மீண்டும் விரைவாக உட்கார ஒட ஆயத்தமாகிக் காரியங்கள் ஆற்றவே. இவ்வாறு செய்வது நல்ல பயிற்சிக்கும் பழக்கத்திற்கும் பிறகே பெறக்கூடிய திறன் நுணுக்கமாகும்.

வலிமையான கால்கள் இந்த ஆட்டத்திற்கு மிக அவசியம் என்ற உண்மை நமக்கு சொல்லாமலே விளங்குகிறது. அதற்கான பயிற்சிகளை மூன்று நிலையில் செய்ய வேண்டும் என்று ஆட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

கோகோ ஆட்டத்தைக் கற்றுக் கொண்டு, அவற்றிற்கான திறன் நுணுக்கங்களை மிகுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்ற காலம் பயிற்சிக் காலமாகும். நல்ல ஆட்டக்காரர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு குழுவில் சேர்ந்து கொண்டு, ஆடத் தொடங்கிய உடன்தான், ஆட்டக்காரர்கள் திறன் நுணுக்கங்களை மறந்துவிட்டு, தங்களையே பெரிய ஆட்களாய்' நினைத்துக் கொண்டு திரிகின்றார்கள். தன்னை நினைத்து தருக்கித் திரிவது தலைக்கணத்திற்குக் கொண்டு வந்து: தறுதலையாக்கிவிடும். ஆட்டத்தை நினைத்து, அதன் திறனை மிகுதியாக்கிவிட நினைப்பதே, அறிவுடையார்க்கு அழகாகும்.

எனவே, போட்டிக்கு அல்லது ஆடத் தொடங்கு வதற்கு முன்னர் அன்றாடம் தொடர்ச்சியாக செய்து